என் மனதில் வந்த வார்த்தை இது.
இது கவிதையா வெறும் வார்த்தையா ?
வர்ணம் இல்லா வானவில்லை யாரும் கண்டதுண்டோ ?
வானில் இல்லா ஜாலம் இந்த வாழ்வில் உண்டோ?
விதை இல்லா மரம் எங்கே உள்ளதென்று - இந்த
அவணிதனில் தேடித் தேடி அலுத்த சிலர்,
வீணில் சொன்ன அந்த வார்த்தை தான் - உன்
வாழ்வில் ஏது ஜாலம்?
வில்லில் இருந்த நாண் விடுபட்டது கண்டதுண்டோ ?
அது இலக்கைச்சென்று சேரும் நேரம்,
அந்த கூர் முனைக்குத் தெரியும்.
உன் வாழ்வின் ஒரு அர்த்தம் அது
உன் செயலைக் கொண்டு மாறும்.
வீண் எண்ணம் என்றும் நம் வாழ்வில் - நல்ல
பலன்எதையும் தருவதில்லை.
அந்த கூர் முனைக்குத் தெரியும்.
உன் வாழ்வின் ஒரு அர்த்தம் அது
உன் செயலைக் கொண்டு மாறும்.
வீண் எண்ணம் என்றும் நம் வாழ்வில் - நல்ல
பலன்எதையும் தருவதில்லை.
தத்துவம் சொன்னார் சிலர் அதை சத்தியம் என்றார்.
சத்தியம் சொன்னார் அதை சிலர் தத்துவம் என்றார்.
இது தத்துவம் இல்லை மற்றும் சத்தியம் இல்லை-பிதட்ற்றல்
என்றால் நான் அதை நன்று என்பேன்!!.
இது தத்துவம் இல்லை மற்றும் சத்தியம் இல்லை-பிதட்ற்றல்
என்றால் நான் அதை நன்று என்பேன்!!.
No comments:
Post a Comment