Sunday, July 26, 2015

தனிமை : --
*********


தனித்தியங்குவது சிந்தனைக்கு வித்திடும்,
சிந்தனை சிறக்க சூழல் துணை செயும்.
வெட்டிச்சிந்தனை விழலுக்கிறைத்த நீராகும்.

தனித்தியங்குவது தன்னிலை உணர்விற்கும்,
தன்னுள் ஒடுங்குவது-
வாழ்வியல் உயர்விற்கும் துணையாகும்.

தனிமை வெறுப்போர்- "அவர் வழி பொது வழி" ,
கூடீயிருப்போர், சேர்ந்து களிப்போர்,
விரும்பிச் சேர்வது வெற்றீயின் மேல் படி.

வென்றோர் தோள் தட்டியும்,
வீழ்ந்தோர் தோள் அணைத்தும் - துணையிருப்பது,
சூழ்ந்தோர் மன நிலை.


 காடு என்றால் - தவம் !
வீடு என்றால் - சுகம் !
தேடு ஒண்றை -- தினம் !.....
விட்டில் பூச்சியும், பட்டுப் பூச்சியும்..
*************************************

இறந்து பட்ட இரு புழுக்கள் பேசிக்கொண்டன..
இறந்து படுதல் நமக்கு ஒன்றும் புதிது அல்லவே,

பட்டு பளபளக்க நான் இங்கு உயிரை விடுகிறேன் - நீயோ ?
சுடரின் பளபளப்பைக் கண்டுவிட்டு உயிரை விடுகிறாய்.

விட்டிலுக்கு வந்த கோபம் துரிதமானது..- உடன்
பட்டிடம் கேட்டதங்கே கோபமாக அது!

ஓளி கண்டு வீழும் என்னை யாரும் கொல்வதுமில்லை., -
உன்னை வளர்த்து இங்கு சுடு நீரில் இட்டுக் கொல்வருமுண்டு,

துளிர்ந்து விட்ட விழி நீர் துடைத்து பட்டு கேட்டது.-தியாகத்தில்
உயிர்த் தியாகத்தில் நம்மிடையே பேதம் இல்லையா ?

நான் சென்ற பின்னும் பட்டென என் பேரும் நிற்குமே- ஆயின்
பொருளில்லா தியாகம் உந்தன் உயிருமல்லவா ?

வாதத்திற்கு உகந்த வார்த்தை கொண்டன இரண்டும் - இதுபோல்
மனிதருள்ளும் வீண் தியாகம் , வெறும் வார்த்தை இருப்பதுமுண்டு.

விட்டில் அதன் தியாகம் இண்றேல் ஒளியுமில்லையா?
பட்டு இல்லா வாழ்வதிலே பெருமை இல்லையா?

வெட்டித் தியாகம் வீண் தியாகம் வேண்டாம் இங்கே!- மாந்தருள்ளும்
உயிர்த் தியாகம் உயர்த்தியாகம் போற்றுவோர் உண்டு.

எத்தகைய தியாகம் என்று உணர்ந்தோர் செயலே-
உயர்த்தி இங்கு பேசப்படும் பெரியோர் நடுவே!
                                                                                  


விடிந்த பின்னும் போராட்டம்  :--
******************************
விளக்கு வெச்சப் பின்னாடி வலைய எடுத்துப் போனாண்டி,

இருட்டுகுள்ளே அவன் நுழைஞ்சி - போன பாத மறைஞ்சதடி.

வீட்டுக்குள்ள மனுசரெல்லாம் -குல சாமிய வேண்டிகிடக்க,

இருட்ட மட்டும் துணையாக்கொண்டு துடுப்பெடுத்து போனானே!,

கடல் அலையோட மல்லுக்கட்டி, தன் வவுத்துப்பாட்ட போக்க,

எல்ல தெரியாக் கடலுக்குள்ளே ,கண் விழிச்சு உழைச்சாண்டி.

இராப்பூரா தனிச்சிருந்து, விடியுமட்டும் உழைச்ச அவன்-

உயிரோட வந்தாலும் , தேவை மட்டும் தீரயில்ல.

சிக்காத மீனத்தேடி தொல தூரம் போன பின்ன, -எல்லை

தாண்டி வந்தவன்னு கொண்டுபோக ஆளு ரெடி.

விடிஞ்ச பின்ன சூரியனின் வெப்பமும் சுட்டுத்தாக்க,

கிடைச்சவர போதுமின்னு வந்தவன் தான் கரையில !!

- கணேசன்