Sunday, July 26, 2015



விடிந்த பின்னும் போராட்டம்  :--
******************************
விளக்கு வெச்சப் பின்னாடி வலைய எடுத்துப் போனாண்டி,

இருட்டுகுள்ளே அவன் நுழைஞ்சி - போன பாத மறைஞ்சதடி.

வீட்டுக்குள்ள மனுசரெல்லாம் -குல சாமிய வேண்டிகிடக்க,

இருட்ட மட்டும் துணையாக்கொண்டு துடுப்பெடுத்து போனானே!,

கடல் அலையோட மல்லுக்கட்டி, தன் வவுத்துப்பாட்ட போக்க,

எல்ல தெரியாக் கடலுக்குள்ளே ,கண் விழிச்சு உழைச்சாண்டி.

இராப்பூரா தனிச்சிருந்து, விடியுமட்டும் உழைச்ச அவன்-

உயிரோட வந்தாலும் , தேவை மட்டும் தீரயில்ல.

சிக்காத மீனத்தேடி தொல தூரம் போன பின்ன, -எல்லை

தாண்டி வந்தவன்னு கொண்டுபோக ஆளு ரெடி.

விடிஞ்ச பின்ன சூரியனின் வெப்பமும் சுட்டுத்தாக்க,

கிடைச்சவர போதுமின்னு வந்தவன் தான் கரையில !!

- கணேசன்

No comments:

Post a Comment