Sunday, October 17, 2010

"காந்தி சிரிப்பது ஏன்? "

தடையில்லாச் சான்று பெற
தடையில்லாமல் கொடுத்தான் - அவன் 
தடை செய்யப்பட வேண்டியதை- லஞ்சம் !
கையில் பச்சை நோட்டில் காந்தி சிரித்தார் -
இவன் செயலைப்பார்த்து ! - மனம் குறுகுறுத்தது.
உடன் பையில் வைத்தான்- காந்தி மறைந்தார்.
இவன்  குறுகுறுப்பும் தான்!  - அடுத்த ஆள் உள்ளே வர !!

 

"கொ(ல்)லு"

படிப் படியாய் உன் வீட்டிலும் ஒரு கொலு !
வாசலில் உன் தாத்தா ,
ஊஞ்சலில் உன் பாட்டி !
கூடத்தில் உன் அத்தை,
அடுப்பறையில் அன்னை
கொல்லையில் காவல் உன் தந்தை !!
உள்ளறையில் உன் முகம் மட்டும் மெல்ல
எட்டிப் பார்ப்பது ஏன் ?
எனக்கு சுண்டலாகவா !!

Saturday, October 9, 2010

"ஒற்றை அடிப் பாதை"

எந்த வழி வந்தோம் நாம் ?
மறந்த  வழி பல இங்குண்டு !
ஒற்றை அடிப் பாதை மட்டும்
என்றும் இங்கு இரு வழி !!

காட்டிலேப் பிறந்து, கனிவகைத் தின்று,
களித்திருந்த அவர் வழித் தோன்றல் நாம்.
சென்றோர் ஒரு வழி, அவரைத் தொடர்ந்தோர்
அதே வழி - என்றும்  இங்கு மனிதன் விட்ட
மூச்சு மட்டும் திறந்த வெளி!

சென்று விட்ட மூச்சை மட்டும் - திரும்பப் பெற்றோர்,
யாருமில்லை !!


  

Friday, October 8, 2010

" வாழ்க "

நட்புடன் சிநேகித்த நண்பர் அவர்க்கு,
என் நல்வாழ்த்து.  பண்புடன் பழகிட, இத்தளம்
உதவிட என் வாழ்த்து !
பழகிடும் வரையிலும் என்னுள் ஓடிடும்
என் மன ஓட்டத்தை பகிர்ந்து , என்னுள்
முளைக்கும்  என் சிநேக பாவத்தைப் புரிந்து,
உங்கள் மனதின் ஆழ் எண்ணக் கருத்தைத் தெளித்து,
நல் வண்ணம் சிறக்க என் தமிழ்த் தாய்யவள்,
உதவிட என் வாழ்த்து !!

"லப் டப்"

உன்னுள் ஏதோ வைத்து - நீ
ஓயாமல் துடிப்பது ஏன் ?
திறந்த மனது உனக்கிருந்தால் எனக்கும்
கொஞ்சம் புரியும் உன்னை.
தினம் ஒரு நிகழ்வு உன் நிலையை மாற்றும்.
ஓயாமல் சிந்தித்து என் சிறு மூளை சொன்ன செய்தி
உன் இதயம் பலஹீனமாய் இருக்கு! ஏன் ?
ஓயாமல் உன்னுள் வைத்து நீ துடிப்பது எதை ?

"உன் கண்கள்"

கூர் அம்பு பட்டு வீ ழ்வது-ஓர் இலக்கு, 
உனக்கு மட்டும் - 
அலைபாயும் உன் விழிகள் 
பட்டு தெறிப்பது அனைத்தும்!! 
அந்த வில்லில் பூட்டுவது - நாண் 
உன் விழியில் மாட்டுவது -நானோ? 






Thursday, October 7, 2010

" ஞாயிறு "

உந்தன் ஒளி இன்றேல் இவ் உலகில்லை
ஆகாசக் கோட்டையில் , ஆயாச பவணி வரும் -உந்தன்    
கதிர்களின்றேல் கரை சேரா இவ் உலகு!

வாரத்தின் முதலாம் நீ !  வாழும் வையத்தின் ஒளியாம்  நீ !!
காலை தொடக்கத்தின் குறியாம் நீ !
வைகறைப் பொழுதின் வித்தாம் நீ !!
உன் சுடர் ஒளி எந்தன் பெயரொளியாக,
என் கலை அது வளற, உன் வாழ்த்தது வேண்டும்!!
    
  

Wednesday, October 6, 2010

கனவுத் தொழிற்சாலை

நினைச்சு நினைச்சு சோந்து போனது மனசு,
நினச்சது ஒன்னு நடப்பது ஒன்னு !
எட்டிப்பாத்தா கிட்ட நின்னது தூரதெரியுது
மடிச்சு வக்க மனசு ஒன்னும் வேட்டி இல்லையே!!
மறத்துப்போன மனசோட
மனசில்லா மனுசங்களோட,
கூடி வாழ இங்க பொறந்துட்டோம்.
விட்டுகொடுத்தா கெட்டுப்போகாதுன்னு
பெரியவங்க சொல்லிவச்ச வாய்ப்பாட்ட
தெனந்தென சொல்லிக்கிறேன்.
ஏமாத்த இங்க நிறைய பேறு- ஏமாற
நான் மட்டும் தானா?
ஏமாந்தது நான் மட்டும் தானா?
மனசுக்குள்ளே மருகுறேன்.
கிட்ட வர மனுசங்கக் கிட்ட  ஒன்னும் இல்ல
தானா செரியாகும்கிறேன். ஆனா என்
மனசுக்கு எதுவும் சரியில்லே.
கஷ்டப்பட்ட மனசுக்கு ஆறுதலா ஒரு விஷயம்,
நான் ஏமார்றது என் சொந்த பந்தத்துகிட்ட தானே ?
கூடிக்களிச்சக் கூட்டாளிங்கட்ட தானே ?
என்னதான் என்னத்தேத்திக்கிட்டாலும், நான்
எல்லாத்துகிட்டையும் தான் ஏமாந்து இருக்கேன்!!
நினைச்சு நினைச்சு சோந்து போனது மனசு!!
                                           




      
        

Monday, October 4, 2010

"விண்ணில் ஒரு வானவில்"

என் மனதில் வந்த வார்த்தை இது.

இது கவிதையா   வெறும் வார்த்தையா ?
வர்ணம் இல்லா வானவில்லை யாரும் கண்டதுண்டோ ? 
வானில் இல்லா ஜாலம் இந்த வாழ்வில் உண்டோ? 
விதை இல்லா மரம் எங்கே உள்ளதென்று - இந்த 
அவணிதனில் தேடித் தேடி அலுத்த சிலர், 
வீணில் சொன்ன அந்த வார்த்தை தான் - உன் 
வாழ்வில் ஏது ஜாலம்? 
வில்லில் இருந்த நாண் விடுபட்டது கண்டதுண்டோ ?
அது இலக்கைச்சென்று சேரும் நேரம்,
அந்த கூர் முனைக்குத் தெரியும்.
உன் வாழ்வின் ஒரு அர்த்தம் அது
உன் செயலைக் கொண்டு மாறும்.
வீண் எண்ணம் என்றும் நம் வாழ்வில் - நல்ல
பலன்எதையும் தருவதில்லை. 
தத்துவம் சொன்னார் சிலர் அதை சத்தியம் என்றார்.
சத்தியம் சொன்னார் அதை சிலர் தத்துவம் என்றார்.
இது தத்துவம் இல்லை மற்றும் சத்தியம் இல்லை-பிதட்ற்றல்
என்றால் நான் அதை நன்று என்பேன்!!. 


"பின்னல்-இடை"

எந்தன் பார்வைபடும் - உன் 
பின்னழகை துடைத்துத்  துடைத்து - கலைத்தது 
உன் பின்னல் !
உன் பின்னழகும் சளைக்குமா ?
பின்னல்   மறைக்க-மறைக்க, 
உந்தன் நடைக்கேற்ப -எட்டி எட்டி 
பார்க்குதே !! என் கண்கள் - பட 
விருந்தாகுதே !!!


 

"மதம்"

மதம் என்ற ஒன்று - மனிதம்
கொன்றது இங்கு!
விதை வேறு ஆயினும் -விளைவது
இந்த மண்ணிலே!!
மண் - ஒன்று ஆனதால்,
மதம் மறைந்து போகும் - விதை
விருட்சமாகும்.

"நிலையற்ற வாழ்வு"

யாரறிவார் பிறப்பின் இந்த இரகசியம்?
பிறந்தப்பின்னே தான் உணர்ந்து வாழ்வது இங்கு- அவசியம்.
இயற்க்கையின் சீற்றம் இங்கு  அனுதினம்
மாந்தர்தம் வாழ்வதனில் துயர் தூஉம் வழிதடம்
வேண்டும் இந்த வாழ்வதனில் நிச்சயம்
இறை துதியில் மனம் கசிய தினம் தினம் !!